சப்புகஸ்கந்தை
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் சுத்திகரிக்கப்படும் மசகு
எண்ணெய்க்கு ஈரானின் மசகு எண்ணெய்யையே இலங்கை நம்பியிருக்கின்றது. மேலும்,
ஈரானின் அதிகளவு சல்பர் செறிந்த கனமான மசகு எண்ணெயை சுத்திகரிக்கும்
வகையிலேயே சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருவதால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை எதிர்க்கும் சீனா, ரஷ்யாவுடன்
இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. இத்தகையதொரு பின்னணியில்
அமெரிக்காவின் சலுகைகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ளமுடியுமா என்பது
சந்தேகமே.
எனவே,
இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவசரப்பட்டு தீர்மானங்களை
எடுக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான்
மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் பிரயோகித்துவரும் அழுத்தங்கள்
இலங்கையையும் பாதிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.