இலங்கையின் கல்வித் துறையில் இன்று
பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதில் இருந்தே பிரச்சினைகள்
ஆரம்பிப்பதாக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் 1000
பாடசாலை வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீதமுள்ள 4000ற்கும்
மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாடசாலை கட்டமைப்பில் ஏழை மக்களின் பிள்ளைகளே உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் பிள்ளைகளோ, உயர்கல்வி அமைச்சின் பிள்ளைகளோ அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அதிகளவு தனியார்மயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பல துறைகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.