கொழும்பு – கொட்டாஞ்சேனை 36 இலக்க
தோட்டப் பகுதி வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்டு
வந்த விலங்கு கொலை நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
உள்ளிட்ட குழு இன்று (29) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இதன்போது
கொலை செய்யப்பட்ட 16 ஆடுகளில் இருந்து பெறப்பட்ட 234 கிலோ கிராம் இறைச்சி
மற்றும் கொலை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 59 ஆடுகள்,
செம்மறியாடுகள் 5 மற்றும் ஒரு மாடு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த நிலையத்தை நடத்திச்
சென்றவரும் அவருக்கு உதவிய 3 பேரும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்
செய்யப்படவுள்ளனர். புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.