யாழ். மாவட்ட கைத்தொழில்
அமைச்சின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று
காலை சம்பிரதாய பூர்வமாக யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில்
ஆரம்பமாகியுள்ளது.
கண்காட்சிக் கூடத்தினை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் , மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி
பற்குணராஜா ஆகியோர் நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இந் நிகழ்விற்கு யாழ். மாவட்ட வர்த்தக
தொழில்துறை சங்கத்தின் தலைவர் பூர்ணச்சந்திரன், சிறிலங்கா வர்த்தக
கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் குமார் மல்வராட்சி, அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், யாழ். மாவட்ட அரச அதிபர்
இமெல்டா சுகுமார், மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, இந்திய
துணைத்தூதுவர் மகாலிங்கம், மற்றும் வங்கி முகாமையாளர்கள் எனப் பலர் கலந்து
கொண்டனர்.
இவ் வர்த்தகக் கண்காட்சியானது
யாழ்.மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக இம் முறை நடைபெறுகின்றது.இன்று
ஆரம்பமாகிய வர்த்தகக் கண்காட்சியானது எதிர்வரும் 22ம் திகதி வரை
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
யாழ். வர்த்தகக் கண்காட்சி சம்பிரதாய பூர்வமாக இன்று ஆரம்பம்
Labels:
இலங்கை
