விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் கருத்தில் உண்மையில்லை என இலங்கை
கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம். தில்சான் மற்றும் புதிய தலைவர்
மஹல ஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்
கிரிக்கட் அணிக்குள் அரசியல் குழப்பங்கள் நிலவி வருவதாக அமைச்சர்
வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
அணித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் சகல சிரேஸ்ட வீரர்களுடனும் கலந்தாலோசித்தேன் என தில்சான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேண்டுமென்றே தோற்பதற்காக அணியில் எவரும் விளையாடவில்லை என மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக குமார் சங்கக்கார அபார திறமைகளை வெளிப்படுத்திவருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணியில்
எந்தவொரு வீரரும் தோற்க வேண்டுமென விளையாடவில்லை, அணி என்ற ரீதியில்
அனைவரினதும் திறமைகள் ஒருசேர வெளிப்பட்டால் மட்டுமே வெற்றியீட்டமுடியும் என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்,
அண்மைக்காலமாக அணி என்ற ரீதியில் வெளிபடுத்தப்பட்ட திறமைகள் குறித்து
திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் குற்றம் சுமத்துவது நியாயமாகாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.