மேற்கத்தேய
நாடுகளின் நிதி நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை,
சிறிலங்காவின் பொருளதாரத்தில் இறங்கு நிலையை ஏற்படுத்துமென உலக வங்கி
தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பொருளாதாரம் 2011ல் 8.3 வீதமாக இருந்து 2012ல் 8.0 வீதத்தை அடையும் சிறிலங்காவின் மத்திய வங்கிய தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உலக வங்கியின் 2012ம் ஆண்டுக்குரிய உலக பொருளாதார வாய்புக்கள் குறித்தான அறிக்கை வெளிவந்துள்ளது.
![]() |
இதில்தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார
வாய்ப்புக்கள் குறித்தான மதிப்பீட்டில், மேற்கத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ள
பொருளதார மந்தநிலை சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கை அடைய
வாய்ப்புகளை வழங்காதென தெரிவித்துள்ளது.
யூரோ நாணய வலயத்தில் ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடி, தென் ஆசியாவுக்கான பொருளாதார மூலதன பரிமாற்றத்தில், பலவீன
நிலையை தோற்றுவிக்கும் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. சிறிலங்கா,
மாலைத்தீவு மற்றும் வங்கதேசம்ஆகிய நாடுகள், ஐரோப்பிய வலய நாடுகளுடன்
கொண்டிருக்கின்ற நெருக்கமான வர்த்க பரிமாற்றத்தில், சரிவு நிலை ஏற்படும்
எனவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையில் கடினமான நிலையை
சிறிலங்காவும், மாலைதீவும் எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள உலக வங்கி ,
எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளில் ஏற்படும் அழுத்தம், எண்ணெய் விலை
அதிகரிப்பை சிறிலங்காவில் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.


