மகிந்த
ராசபக்ச 13ஆவது திருத்த சட்டத்திற்கு மேலாக அதிகாரப் பரவலாக்கலை வழங்கி
இனப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறியிருக்கிறார். அவர் இது போன்று பல
தடவைகள் வாக்குகுறுதிகளை வழங்கியவர்தான் என இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
![]() |
அரசமைப்பு திருத்தம் மற்றும் அதற்கு
அப்பாலும் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய வெளியுறவு அமைச்சர்
கிருஷ்ணாவிற்கு உறுதியளித்திருப்பதாகவெளியான செய்தி
வரவேற்கப்பட வேண்டியதாகும். என்றாலும் அச்செய்தி தற்போதைக்கு இந்திய அமைச்சர் கிருஷ்ணா மூலம் மாத்திரமே வெளியாகியுள்ளது.
வரவேற்கப்பட வேண்டியதாகும். என்றாலும் அச்செய்தி தற்போதைக்கு இந்திய அமைச்சர் கிருஷ்ணா மூலம் மாத்திரமே வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி முன்னர் பல தடவைகள் மற்றும்
‘இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் இதனை முன்னர்
தெரிவித்திருந்தார் விரைவான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா
உட்பட பல தரப்பினர் கேட்டுவந்தனர். ஆனால்
விடுதலைப்புலிகளை யுத்தத்தில் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கழித்தும் அதில் சிறிது முன்னேற்றமும் காணப்படவில்லை என்பது அத்தரப்பினருக்கு கவலையை கொடுத்தது. போருக்கு பின்னரான நிலையில் தனது அரசியல் லாபங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் ராஜபக்ச ஈடு;பட்டிருந்தார் என்றும் இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது


