ஓமான் நாட்டு பெற்றோலிய வள அமைச்சர்
இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (26) இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இவரின் விஜயத்தின் போது முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக பெற்றோலிய வள அமைச்சு
கூறியது.
ஓமான் அமைச்சர் தனது விஜயத்தின் போது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ,
பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோரை சந்தித்துப் பேச
உள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
விதித்துள்ள நிலையில் ஈரானில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி
செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஓமானில் இருந்து
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.