
வடகொரியாவில்
சமீபத்தில் மரணம் அடைந்த அதிபர் 2-வது கிம் ஜோங் மறைவின்போது இரங்கல்
ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் இறுதி சடங்கில் கலந்து கொண்டபோது
வாய்விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு நிர்வாகம் முடிவு
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள்
தொழிலாளர் வேலைவாய்ப்பு முகாமில் 6 மாதம் உழைக்க வேண்டும். 2-வது கிம்
ஜோங்கின் தந்தை கிம் 2-வது சுங் 1994-ம் ஆண்டு மறைந்தபோதும் இவ்வாறு தண்டனை
அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக
யார் அதிக அளவில் அழுதது? யார் அதிக அளவில் துக்கத்தை வெளிப்படுத்தியது?
என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விவரம் சேகரித்து உள்ளனர்.


