ஒரு வருட காலத்திற்கு மாத்திரம் தாம் மீண்டும் இலங்கை அணியின் தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் டீ.எம்.டில்ஷானும் கலந்து கொண்டிருந்தார்.
இளைஞர்களுக்கு
சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயே தான் அணித்தலைவர் பதவியிலிருந்து 2011ஆம்
ஆண்டு விலகியதாகவும் ஆனாலும் தற்போதுள்ள நிலைமைக்கு அமைய இளம் வீரர்கள்
தலைமைத்துவப் பதவியை ஏற்றுக்கொள்வது சாதகமாக அமையாதென தான் கருதுவதாகவும்
மஹேல ஜயவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதேவேளை,
டி.எம்.டில்ஷான் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களுக்கு பலரும் பல்வேறு
கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எனவே, பிரச்சினையைப் பெரிதாக்காது எனது
இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானித்தேன் எனத்
தெரிவித்தார்.
புதிய
தலைவருக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மஹேல
போன்றதொரு அனுபவசாலிக்கு தலைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டதையிட்டு தான்
மகிழ்ச்சியடைவதாகவும் டில்ஷான் மேலும் குறிப்பிட்டார்.