அரசாங்கத்தினால்
தயாரிக்கப்பட்ட விடயங்களையே விசேடகுழு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது என
இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான குளறுபடிகளுக்கு ஜனாதிபதி விசேடகுழு சரியான முறையில் தீர்க்கவில்லை.
இந்த நிபுணர் குழு தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகின்றன.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில்
உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள்
ஜனாதிபதி செயலகத்தால் நேற்று வெளியிடப்பட்டது.
குறிப்பாக இதன் மூலம் நாட்டில் உள்ள புத்திஜீவிகளுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய போலியான நிபுணர் குழு அறிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினையை மூடிமறைக்க முடியாது.
அதே வேளை விசேட குழு இசட் புள்ளி முறைமையை
பயன்படுத்திய போது ஏற்பட்டுள்ள மாவட்ட தரநிலைகளில் உள்ள குளறுபடிகள்
தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என பேராசிரியர் றுஃபெல்டா ஓ தட்டில்
குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு இசட் புள்ளி முறைமையை
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான றுஃபெல்டா ஓ தட்டிலே
அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
விஷேட குழு தீர்க்கவில்லை பரீட்சை குளறுபடிகளை - இலங்கை ஆசிரியர் சங்கம்
Labels:
கல்வி