ஐ.பி.எல் போட்டிகள் குறித்து அறிவிப்பு

5 வது ஐ.பி.எல்  போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியும் இறுதி போட்டியும் சென்னையிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 
மொத்தமாக  76 போட்டிகள் இடம்பெறபோகின்றன.
 
72 லீக் போட்டிகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  
சென்னை, கொல்கத்தா, மும்பை, ஜெய்பூர், பெங்களூர், விஷகபட்டினம், பூனே, டெல்லி, ஹைதராபாத், மொகாலி, தரம்சால ஆகிய  மைதானங்கள் தயார்படுத்தபட்டுள்ளன.
 

'ஸ்ரீலங்கா கிரிக்கெட்'  இன் புதிய தலைவராக உப்பாலி தர்மதாச நியமிக்கபட்ட பின்னர்,  இலங்கை கிரிக்கெட் நட்டத்தில் இயங்குவதாலும், உலக கிண்ண போட்டிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை போக்கும் நோக்குடனும் சில ஐ.பி.எல்; போட்டிகளை இலங்கை மைதானகளில் நடத்துவதற்கான தங்களது ஆலோசனையை முன்வைத்தார்.
 
 
இருந்தபோதும்,  எந்த ஒரு போட்டியும் இலங்கையில் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ஆசிய கிண்ண போட்டிகள் நிறைவு பெற்று 12 நாட்களின் பின்னர் ஐ.பி.எல் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
 
இதேவேளை வீரர்களுக்கான ஏலம் பெப்ரவரி 24 ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now