சிறந்த கல்வி தகைமையை கொண்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு காவல்துறையில் இணைந்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை மா அதிபர் எம் கே பி திஸாநாயக தெரிவித்துள்ளார்.
காவல்துறை திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைய, இணைந்து கொள்ள விரும்பும் இவர்கள் முறைப்படி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது வரை சரணடைந்த 11 ஆயிரத்து 500 முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.
தமது புனர்வாழ்வு நடவடிக்கைகயை நிறைவு செய்த இவர்கள் தற்போது சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே, காவல்துறையில் இணைக்கப்பட்ட 600 யிற்கும் மேற்பட்ட தமிழ் காவல்துறையினர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.