எய்ற்கன்
ஸ்பென்ஸ் இனது 30 வீதமான பங்குகளை சீன வணிக நிறுவனம் ஒன்று வாங்குவதாக
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொழும்பு தெற்கு இறங்கு துறையை
35 வருடங்கள் அந்நிறுவனம் இயக்க வழிசெய்யும் என ஐ.தே.க.வின் பொருளியல்
பேச்சாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின்
பொருளாதாரத்தின்மீது சீனா கட்டுப்பாடுகளை ஏற்படுத்த இது வழிவகுக்கும்.
போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புவதில், உண்மையான
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது எனவும் அவர் குற்றம்
சாட்டினார்.
உரிய
முறைகள் பின்பற்றப்படவில்லை. அதிக செலவினங்கள் கொண்ட சீன நிர்மாணத் துறை
சார்ந்தோரே இதற்குப் பயன்படுத்தப்படுகின்றனர். கொமிஷனை அடிப்படையாகக் கொண்ட
சீன நிதியுதவித் திட்டங்களே அதிக செலவில் இங்கு அமுல்படுத்தப்படுகிறது
எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.