மித்தெனிய பொலிஸ் பிரிவின் கோனதெனிய எனுமிடத்தில் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி, 30 வயது குடும்பஸ்தரை தடிகளால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, தங்காலை மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டதன் பின்னர் அந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குற்றவாளிகளின் தந்தையுடன் ஏற்பட்டிருந்த தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருந்தமை வழக்கு விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டுள்ளது.