மெகசின் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், சட்ட ஆலோசகர் உள்ளிட்ட சிலர் குழுவில் அடங்குவதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.
மெகசின் சிறையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 80 லட்சம் ரூபா சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீ வைப்புச் சம்பவத்தில் சிறை கைதிகள் சிலரின் முக்கிய ஆவணங்கள் அழிந்து போயுள்ளதென அமைச்சர் கூறினார்.