பாகிஸ்தானிய
இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை
தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 2.38 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கண்களைக் கட்டி தலிபான்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்துள்ளனர்.
பின்னர் அவர்களின் பின்னால் நின்று தலிபான்கள் ஒவ்வொரு உறுப்பினராக சுட்டு வீழ்த்துகின்றனர்.
தமது இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமைக்கே, இவர்களைக் கொன்றதாகவும் அக்காணொளியில் தலிபான் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தலிபான் இயக்க உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டால் இத்தகைய கொலைகள் மேலும் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் வட மேற்கு பாகிஸ்தானில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்களின் சடலங்கள் இம்மாத ஆரம்பத்தில் மீட்கப்பட்டன.மேலும் இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் இக்கடத்தல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதனை விளக்கும் பகுதியொன்றும் இடம்பெற்றுள்ளது.
தலிபான் அமைப்பு இக்கொலைகளுக்கு உரிமைகோரியிருந்தது.