
பாகிஸ்தான் அணி தவிர மற்ற எந்த அணியிலும் பங்கேற்க மாட்டேன் என்று அந்நாட்டு வீரர் ஷஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பி. பி. எல். டி. 20 தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான ஏலத்தில் பாகிஸ்தானின் அப்ரிடி அதிகபட்சமாக ரூ. 3.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இது குறித்து அப்ரிடி கூறியதாவது :-
அதிக
தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் நாட்டுக்காக
விளையாடுவதே முக்கியம்.பாகிஸ்தான் அணிக்காக விளையாடவே மிகவும் ஆர்வமாக
உள்ளேன். பி. பி. எல். டி. 20 தொடரில் களமிறங்க மாட்டேன் என்றார்.