பருத்தித்துறை
சக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்ட மாணவி டிலக்ஷனாவின்
வாயையும் மூக்கையும் மூடிப் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட
மூச்சுத் திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என முதற் கட்ட விசாரணைகளில்
இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது கழுத்தில் கத்திரிக்கோலினால்
குத்தப்பட்ட காயமும் உள்ளது.
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில்
இருதயநாதர் மேரிடிலக்சனா என்ற 17 வயது மாணவி நேற்றுமுன்தினம் கடத்திச்
செல்லப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி தனது வீட்டிலிருந்து மாலை
6.30 மணியளவில் புறப்பட்டு 75 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தனது
பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.இந்த இரு வீடுகளுக்கும் இடைப்பட்ட
பகுதியில் பெரியம்மாவின் வீட்டுக்கு அருகில் ஆள்கள் இல்லாத வீட்டில்
வைத்தே இந்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை ஒரு குழுவினரே
மேற்கொண்டுள்ளனர் முதற்கட்ட விசாரணைகளின்போது சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது.
மாணவியைக் கடத்தியவர்கள் மாணவியின்
வாயையும் மூக்கையும் சத்திர சிகிச்சைக்கு பயன்படும் பிளாஸ்ரரினால் மூடி
ஒட்டியுள்ளனர். அத்துடன் கத்திரிக்கோலால் கழுத்தையும் குத்தியுள்ளனர்.
மாணவியின் கன்னத்தில் கடித்துள்ளதுடன் அவருடன் தகாத முறையில் நடக்கவும்
முற்பட்டுள்ளனர். இறுதியில் மாணவி மூச்சுத் திணறலால் மரணமாகியுள்ளார்.
மாணவியின் கழுத்தைக் கத்திரிக்கோலால்
குத்தியதன் மூலம் அவர்கள், கொலை செய்யும் நோக்குடன் மாணவியைக் கடத்தவில்லை
என்று முதற் கட்ட விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.இந்தக் கொலை தொடர்பான
விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை வலை வீசித்தேடி
வருகின்றனர்.
|
கடத்தப்பட்ட மாணவியின் வாய்க்கும் மூக்குக்கும் பிளாஸ்ரர்
Labels:
குற்றவியல்