இலங்கை
கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கரூரில்
நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:-
இலங்கை
அணியில் 20 ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். வளர்ந்து வரும்
வீரர்களுக்கு 3 ஆண்டுகள் அவகாசம் தர வேண்டும். அப்போதுதான் சிறந்த
சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாக வாய்ப்பு கிடைக்கும். தற்போது உலகளவில்
ஹர்பஜன்சிங், அஸ்வின், டேனியல் வெட்டோரி, அஜ்மல், சுவான் ஆகியோர் சிறந்த
சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
சச்சின்
விரைவில் 100- வது சதம் அடிக்க வேண்டும் என்று அனைவரும்
எதிர்பார்க்கிறார்கள். அவரும் முயற்சி செய்கிறார். அவர் சிறந்த வீரர்.
விரைவில் 100-வது சதத்தை அடித்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவார்.
சச்சினுக்கு
பாரத ரத்னா விருது வழங்குவது இந்தியாவின் முடிவு. எனது சொந்த கருத்துப்படி
சச்சின் அந்த விருதுக்கு தகுதியானவர். இந்திய அணி நாடு திரும்பியதும்
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து நன்றாக விளையாடுவார்கள். வரும் ஐ.பி.எல்.
சீசன் கிரிக்கெட்டில் விளையாட மூன்று ஆப்சன்கள் கொடுத்துள்ளேன். அதில்
ஏதாவது ஒரு அளவில் இடம் பிடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.