கோப்பாயில் பாடசாலை மாணவி தீக்குளித்து தற்கொலை!



யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கலைஒளி கிராமத்தைச் சோ்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்கும் நல்லதம்பி கௌசிகா என்ற பாடசாலை மாணவியே  சனிக்கிழமை (21) இரவு 7.00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெற்றோருக்கு இடையே ஏற்படட குடும்பச் சண்டை காரணமாகவே விரக்தி அடைந்த இந்த மாணவி தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துள்ளார். உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ் போதனாவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காது அதிகாலை இரண்டு மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகளைக் காப்பாற்றச் சென்ற அவரது தந்தை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பலத்த எரி காயங்களுக்குஉள்ளாகியுள்ள நிலையில் வைத்திய சாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்த மாணவியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளது. தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இரண்டு ஆண் சகோரதர்களும் தொழில் ஏதும் செய்யாத நிலையில் வீட்டிலிருக்கின்றார்கள். இந்த மாணவி குடும்பத்தில் 3வது நபர் எனவும், சொந்த வீட்டில் குடியிருந்த போதிலும், வீட்டிற்கு மின்சாரம் இல்லாத காரணத்தினால் இவர்கள் குப்பி விளக்கிலேயே படித்து வந்தனர். எனவே, வீட்டில் காணப்பட்ட வறுமை காரணமாகவே இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சம்பவத்தை நேரில் கண்ட அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now