இலங்கையில் கணவன் மூலமாகவே அநேக பெண்களுக்கு எச். ஐ. வி தொற்று!

இலங்கையில் அநேகமான பெண்களுக்கு கணவன் மூலமாகதான் எச். ஐ. வி தொற்றுகின்றது என அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


AIDS Foundation of Lanka ஸ்தாபனத்தின் ஆய்வு மற்றும் நிகழ்ச்சி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரோஜனி பெரேரா இத்தகவலை வெளியிட்டு உள்ளார்.

இலங்கையில் எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற பெண்களில் 80 சதவீதமானவர்களுக்கு கணவன் மூலமாகதான் இத்தொற்று ஏற்பட்டு இருக்கின்றது என்றார்.
எச். ஐ. வி தொற்று ஆண்கள் மத்தியில் 11 சதவீதத்தாலும், பெண்கள் மத்தியில் 09 சதவீதத்தாலும் அதிகரித்து உள்ளது, இலங்கையில் முதலாவது எச். ஐ. வி தொற்றாளர் 1987 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார்.

எச். ஐ. வி தொற்றுடன் பிறந்து இருக்கின்ற குழந்தைகள் இது வரை 52, எச். ஐ. வி அல்லது எயிட்ஸ் நோய் இரண்டில் ஒன்றால் சுமார் 15 சிறுவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.

கடந்த வருடம் எச். ஐ. வி தொற்றாளர்கள் 146 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள், இவர்களில் அநேகமானவர்கள் மேல், வட மேல், மத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். 19 முதல் 50 வரையான வயதுக்காரர்களே பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் அநேகர், இலங்கையில் எச். ஐ. வி பெருவாரியாக தொற்றுகின்ற அளவு மிக குறைவாகதான் உள்ளது.

இலங்கையில் எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற வயதுக்கு வந்தவர்களின் விகிதம் மொத்த சனத் தொகையில் 0.02 சதமானம், அதாவது 3000 பேரில் 350 பேர்தான் எச். ஐ. வி தொற்றுக்கு உள்ளாகின்றார்கள்.

வெளிநாட்டு பயணங்கள் காரணமாகவே இலங்கையில் எச். ஐ. வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now