ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை ‘நெளும் பொகுன வீதி” என்று பெயர்
மாற்றியமை அரசு தமிழருக்கு செய்த அவமானமான செயலாகும்.இச்செயல்
மூலம்தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற
சந்தர்ப்பங்கள்அதிகரித்துள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினரான முஜீபுர்
ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டிற்கு பெரும் சேவைகள் செய்த தலைவர்களை கௌரவிக்கும் முகமாக
அவர்களின் பெயர்களை வீதிகளுக்கு சூட்டினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம்
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை படு மோசமான முறையில் சிதைத்து வருகின்றது
என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ஐ.தே.க. வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில்
நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர்களை கலைஞர்களை கௌரவிக்கும் கலாசாரம் ஆரம்ப காலம் தொட்டே காணப்படுகின்றது. அப்போதைய அரசாங்கங்கள் அவர்களை கௌரவிக்கும் முகமாக வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை வைத்தன.
ஆனந்த குமாரசுவாமி வீதியை நெளும் பொகுன மாவத்த என்று மாற்றியமை அநாகரிகமான செயலாகவே கருதப்பட வேண்டும். கலைக்காக தொண்டு செய்து