ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் எதுவும் ஒழுங்கு செய்யப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் மாணவர்களின் வீட்டிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை என பல்கலைக்கழக நிர்வாக குழு அறிவித்துள்ளது.