எந்த நேரமும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கிய பொழுது போக்கே கேம்ஸ் விளையாடுவது தான்.இந்த வசதியை கம்ப்யூட்டரிலும், மொபைல் போன்களிலும் எளிதாக பெறலாம். 2011-ஆம் ஆண்டு அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற கேம் தான்.
பல இளைஞர்களாலும், சிறியவர்களாலும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு என்ற பெருமையை இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் பெற்றுள்ளது. இந்த கேம் விதவிதமான ப்ளாட்ஃபார்மில் இருந்து 500 மில்லியன் தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக, நவம்பர் மாதம் ரோவியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ரோவியோ நிறுவனம் தான் ஆங்கிரி பேர்ட்ஸ் வீடியோ கேமை உருவாக்கியது.
2011 ஆண்டில் டாப் 10 கேம் அப்ளிக்கேஷன்களில் ஃப்ரூட் நின்ஜா, ஆங்கிரி பேர்ட்ஸ், கட் த ரோப், டைனி விங்ஸ் போன்ற விளையாட்டுகள் இடம் பிடித்து உள்ளது. அமேசான் ஆப்ஸ்டோர், ஆப்பிள் ஆப்ஸ்டோர், ஆன்ட்ராய்டு மார்கெட், பிளாக்பெர்ரி ஆப்ஸ்வேர்ல்டு, விண்டோஸ் போன்-7 மார்கெட், ஒவி ஸ்டோர் போன்ற இடங்களிலும் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் அதிகம் டவுன்லோட் செய்யப்படுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதே போல் உதாரணத்திற்கு இன்னொரு விளையாட்டை சொல்ல வேண்டும் என்றால் டாக்கிங் டாம் கேட். இது அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது யார் என்ன பேசினாலும் அதை ஒரு பூனை பொம்மை திருப்பி பேசுகிறது. இந்த டாக்கிங் டாம் பல பேரை கவர்ந்து இருக்கிறது. இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனை குட்டியை காட்டினால் நிறைய முதியவர்களும் கூட இதனுடன் பேச ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கு மனோ ரீதியாக இன்னொரு காரணமும் சொல்லலாம். பொதுவாக வயோதிகர்களுடன் யாரும் அதிகம் பேசுவது இல்லை. இதனால் பேசியவுடன் திருப்பி பேசும் இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனைகுட்டியிடன் முதியவர்கள் அதிகம் சிரித்து பேசுகின்றனர். கம்ப்யூட்டர்கள் மனிதர்களை எந்திரமாக மாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது.
இப்பொழுது உள்ள ஒரு உண்மை என்னவென்றால் எந்திரமாக திரியும் மனிதர்களை இது போன்ற கேம்கள் மனிதர்களாக மாற்றுகிறது என்று தாராளமாக கூறலாம்.
இணையத்தள முகவரி :
http://www.oneonlinegames.com/download-games/angry-birds-games-free-download
இணையத்தள முகவரி :
http://www.oneonlinegames.com/download-games/angry-birds-games-free-download