போதைப்பொருள் ஒழிப்பு வருடமாக 2012ஆம் ஆண்டைப் பிரகடனப் படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் இவ்வருடத்துக்கான பிரதான திட்டமாக இது செயற்படுத்தப்படுவதாகவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் இவ்வருட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயத்தை வெளியிட்டார். போதைப்பொருள் பாவனையில்லாத சிறந்ததொரு பரம்பரையை உருவாக்க பல வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.