இதற்கமைய தெற்கு அதிவேக வீதியில் முதற்கட்டமாக இரண்டு தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சந்திரசிறி வீரசேகர கூறியுள்ளார்.
விலை மனு கோரலுக்கு அமைவாக தெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடுவதற்கான தனியார் பஸ்கள் தெரிவு செய்யப்பட்டதாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் சொகுசு பஸ்கள் மாத்திரமே தெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அந்த பஸ்கள் அதிக வேகத்துடன் செலுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் அதிக வேகத்துடன் செலுத்தப்படும் போது பஸ்களில் அனர்த்த எச்சரிக்கை சமிச்சையொன்றும் செயற்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தவிர இந்த பஸ்களுக்காக ஜி.பி.எஸ்.தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.