நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோத அவர் இதனை கூறியுள்ளார்
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முரணாக அமையாத மக்கள் சக்தியொன்றை உருவாக்கப்போவதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
சில ஊடகங்களில் கட்சியை விட்டு வெளியேறும் திட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பாதையிலேயே பயணிப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாஸ, அதிலிருந்துவிடுபடும் எண்ணமும் தமக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.