அடிலெய்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தற்போதைக்கு ஒய்வு பெறும் திட்டமில்லை என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல்டிராவிட் கூறினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் , மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தடுப்புச்சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல்டிராவிட், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய
அணியில் இடம் பெற்றிருந்தார். 4 போட்டிகளில் விளையடி 194 ரன்கள் மட்டுமே எடுத்தார்.. இதன் சராசரி 24.25 ஆகும்.மோசமான ஆட்டத்தினால் பல முறை போல்டாகி சாதனைபடைத்துள்ளார். இதனால் ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவார் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறுகையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகின. அப்படியில்லை, தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. அடுத்த ஏழு அல்ல எட்டு மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை என நினைக்கிறேன். எனவே டெஸ்ட் போட்டிகளின் போது தான் எனது ஓய்வை அறிவிப்பேன், அதுவரை ஓய்வு பெறும் முடிவை நான் இன்னமும் எடுக்கவில்லை என்றார்.