சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த
இந்திய அணி 0-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் 7
புள்ளிகளை இழந்து 111 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கைக்கு
எதிரான டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது
இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து 125 புள்ளிகளுடன் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 110.80 புள்ளிகளுடன் 4-வது
இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி, மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத்
தீவுளுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் 1-0 என்ற கணக்கில்
வென்றாலே இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்தைப் பிடித்துவிடும்.கடந்த
13 மாதங்களுக்கு முன்பு 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி,
அதன்பிறகு கண்ட தோல்விகளால் படிப்படியாக புள்ளிகளை இழந்து இப்போது 3-வது
இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டியைப்
பொறுத்தவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடருக்குப்
பின்னரே 2-வது இடத்தில் இருந்து இந்தியா பின்தங்குமா என்பது தெரியவரும்.