எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்துடன் இணைந்து, ஊடக அடக்குமுறையில்
ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர்
மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
தமது
தவறுகள் வெளியாவதை தடுக்க அரசாங்கங்கள் ஊடக அடக்குமுறையில் ஈடுபடும்
எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஊடக உரிமை, பாதுகாப்புக்காக குரல் கொடுக்க
வேண்டும் என்ற போதிலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியுடன்
ஏற்படுத்திக்கொண்டுள்ள ரகசியமான உடன்பாடு காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர்
ஊடக அடக்குமுறைக்கு ஆதரவு வழங்கி வருகிறார் எனவும் குணரத்ன குற்றம்
சுமத்தியுள்ளார்.
ஜனநாயகத்திற்கு
எதிராக செயற்படும் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையில்லை.
அதிகரத்தை கைப்பற்ற முடியாத இயலாமை காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற
பதவியை பாதுகாத்துக்கொள்ள ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும்
வேலைத்திட்டங்களை அருவருக்கதக்கதென கண்டிப்பதாகவும் மைத்திரி குணரத்ன
மேலும் தெரிவித்துள்ளார்.