தென்னாபிரிக்க
தொடரின்போது ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவில்
நடைபெறவுள்ள முக்கோணத் தொடரை சாதகமான முறையில் எதிர்கொள்ளவுள்ளதாக, இலங்கை
கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முக்கோணத் தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை அணி நேற்று முந்தினம் நாட்டை விட்டு புறப்படும் முன்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹேல ஜயவர்தன அங்கு மேலும் தெரிவிக்கையில், உலகிலுள்ள சிறந்த இரு அணிகள் எங்களோடு போட்டியிடுகின்றன, அது எமது அணிக்கு பாரிய சவாலாக இருக்கும். அணி சிறந்த முறையில் இருப்பதாக நான் கருதுகிறேன். தென்னாபிரிக்க தொடரின்போது வெளிப்படுத்திய திறமைகளை இதில் நாம் தொடருவோம். தவறுகளை மீண்டும் திருத்திக்கொள்வோம். அது மிகவும் முக்கியமானதென நான் கருதுகிறேன். அங்கு சென்று பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கென இரண்டு போட்டிகள் உள்ளன. வீரர்களுக்கு வாய்ப்பளித்து பார்க்கவேண்டும். இதன் மூலம் சிறந்த அணியை தெரிவுசெய்ய முடியும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் மற்றுமொரு அணியாக இந்தியா கலந்துகொள்ளவுள்ளது.