

போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, சந்தேகநபர்கள் இருவரும் தன்னியக்க இயந்திரங்களில் இலட்சக் கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 70 போலி கடனட்டைகளும், ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
23 வயது மற்றும் 31 வயதான இரண்டு சந்தேகநபர்களுக்கும் உதவியதாக கூறப்படும் மேலும் 03 இலங்கையர்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
