ஊடக
அடக்குமுறைக்கு எதிராக நாளைய தினம் கொழும்பில் போராட்டம ;நடத்தப்பட
உள்ளது. நாளைய போராட்டத்திற்கு கறுப்பு ஜனவரி என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டின்
பல முன்னணி ஊடக அமைப்புக்கள் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளன.
சர்வதேச சமூகம் மற்றும் ஊடக அமைப்புக்களின் தொடர் எதிர்ப்பையும்தாண்டி
அரசாங்கம் ஊடகங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக
குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
2009ம்
ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோதிலும், ஊடக
அடக்குமுறைகள் இன்னமும் முடிவுறுத்தப்படவிலi;ல என
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள்
மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது பிரயோகிக்கப்படும்அழுத்தங்களின் காரணமாக சுய
தணிக்கையுடன் செயற்பட வேண்டிய நிலைமை
ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே பல்வேறு ஊடக ஒடுக்குமுறை சம்பவங்கள்இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நாளைய தினம் கொழும்பு கோட்டே ரயில நிலையத்திற்கு எதிரில் கறுப்புஜனவரி ஊடக போராட்டம் நடைபெறவுள்ளது.