ஒபாமாவின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்


ஒபாமாவின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப் ;இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஸ்டீவன் ரெப் கடமையாற்றுகின்றார்.
 
எதிர்வரும் வாரங்களில் இந்த விஜயம் இடம்பெறும் என ராஜதந்திரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்மற்றும் சிவில் சமூகத்தவர்களை ஸ்டீவன் ரெப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ரெப்விசேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேவேளை, ஸ்டீவன் ரெப்பின் விஜயம் பற்றி உத்தியோகபூர்வமானதொடர்பாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now