பிரச்சினைகளை இனவாதத்தினால் மூடிமறைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டின் அனைத்து
பிரச்சினைகளையும் இனவாதத்தினால் மூடிமறைப்பதற்கு முயற்சிக்கின்றது. இந்தியா
அண்மையில் அக்னி என்னும் ஏவுகணையை பரிசோதனையை செய்தது.
|
எனினும், அக்னி ஏவுகணையைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த ஓர்
ஏவுகணையொன்று இலங்கையில் இருக்கிறது. அதன் பெயர் கப்ரால் என்பதாகும்..
இந்த ஏவுகணை தூரம் செல்லச் செல்ல, மக்களின் வாழ்க்கைச் செலவு
உயர்வடைவதுடன், வீட்டுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைகின்றது. அக்னி ஏவுகணை
ஒரு நகரத்தை மட்டுமே தாக்கி அழிக்கும் எனினும், கப்ரால் ஏவுகணை இலங்கையையே
அழித்துவிடும்.
எதிர்வரும் மே தினத்தில் சம்பள உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு குறைப்பு ஆகியவற்றை முதனிலைப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவத்துள்ளார். |
இந்தியாவின் 'அக்னி' ஏவுகணையைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் ஏவுகணை இலங்கையில் இருக்கிறது: ரணில்.
Labels:
விலைவாசி