யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சென்றிருந்த அப்துல் கலாம், யாழ் பல்கலைக்கழகத்தில் விசேட கலந்துரையாடல்களில் பங்கேற்றதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய முன்னாள் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் சில திட்டங்களை கலாநிதி அப்துல் கலாம் நேரில் சென்று பார்வையிட்டதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதந்திருந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி நாட்டில் மும்மொழி வருடத்தினைப் பிரகடனப்படுத்துவதற்கு இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.