பரீட்சைக்கு தோற்றிய 70 வீதமான மாணவர்கள் விடைத்தாள்களை மீள் மதிப்பீடு செய்ய..
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுகளை மீள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கையின் மூலம் தபால் திணைக்களம் பாரியளவு லாபமீட்டி வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
அனுராதபுர தபால் நிலையம் விடைத்தாள் மீள் மதிப்பீட்டு விண்ணப்பக் கட்டணமாக 200,000 ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய 70 வீதமான மாணவர்கள் விடைத்தாள்களை மீள் மதிப்பீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பான்மையான மாணவர்கள் மீள் மதிப்பீட்டு கோரிக்கை முன்வைத்துள்ளமையின் மூலம், பரீட்சை திணைக்களம் மீது மாணவர்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை வெளிப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு தபால் நிலையம் இவ்வாறு வருமானம் ஈட்டியிருந்தால் ஒட்டுமொத்த தபால் திணைக்களத்தின் வருமானத்தை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.