பாடசாலையொன்றின்
நான்கு மாணவர்கள் ஓடுவதைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்ட இரண்டு பொலிஸார்
அவர்களை தடுத்து நிறுத்தி பார்த்த போது ஐயோ மோகினி பிசாசுகள் எங்களை
விரட்டி வருகிறதென்று தூரத்தில் உள்ள ஒரு கடைப்பக்கமாக கை அசைத்து
காட்டினார்கள்.
பொலிஸாரும் இதில் ஏதோ உண்மை இருக்கலாம் என்று நினைத்து வீதியை தாண்டி அந்தக் கடையை நோக்கி சென்ற போது அந்தக் கடையில் சேலை களை விற்பனை செய்வதற்காக தலையற்ற பொம்மைகளுக்கு சேலை அணிவித்தி ருந்ததைக் கண்டு, இவை மோகினி பிசாசுகள் அல்ல, பொம்மைகள் என்று கூறி அந்த மாணவர்களுக்கு நல்ல சாத்து சாத்தியிருக்கிறார்கள்.
பின்பு அவர்களை தண்ணீர் தெளித்து விசாரித்த போது அவர்கள் சொன்ன கதையை கேட்டு அழுவதா? சிரிப்பதா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவர்கள் கொழும்பு மாநகரத்திற்கு அப்பால் உள்ள ஒரு பிரதான நகரின் பிரபல
பாடசாலையொன்றின் மாணவர்கள் தாங்கள் ஒரு கிரிக்கட் போட்டியை
நடத்தவிருப்பதாக கூறி வீடு வீடாகச் சென்று சேகரித்த பணத்தைக் கொண்டு
போதையூட்டும் ஒரு புகையிலையை வாங்கி அதனை சிகரட் போல் சுருட்டி புகைத்து
மகிழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அதன் தாக்கத்தை தெரி யாமல் அதிக நேரம்
புகைத்ததனால் திடீரென்று மயக்கமடைவது போன்ற உணர்வு ஏற்பட்டதனால் இரவு 10
மணியளவில் வீதியோரமாக இருந்த கடைப் படியில் அமர்ந்து கண் அயர்ந்து
விட்டார்கள்.
இரவு 12 மணியளவில் ஒரு மாணவனின் தாயார் மகன் வீடுவரவில்லை என்ற பதற்
றத்தில் அவனது கையடக்கத் தொலை பேசிக்கு கொடுத்த அழைப்பினால் கண் விழித்த
அந்த மாணவன் தன்னுடைய மூன்று நண்பர்களையும் தட்டியெழுப்பி தள்ளாடியவாறு
தங்கள் வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்த போது, தூரத் தில் இரண்டு பெண்களின்
தலையில்லாத முண்டங்கள் அவர்களை நோக்கி வருவ தைக் கண்டு நான்கு பேரும்
பயந்து மோகினி பிசாசு தங்களை விரட்டி வருகிறதென்று கத்திக் கொண்டு ஓட
ஆரம்பித்தார்கள்.
அவர்கள் போதை வஸ்த்து உட் கொண்டிருப்பதாக சந்தேகித்து விசாரணைக்கு
உட்படுத்தியவுடன் நாங்கள் தெரியாத்தனமாக இந்த போதை வஸ்த்துக்களை
பாவித்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள் என்று பொலிஸாரிடம் மன்றாடி
கேட்டவுடன் பொலிஸார் அந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து மாணவர்களை
எச்சரித்து விடுவித்தனர்.