ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றன –அமெரிக்க நீதித் திணைக்களம்


ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றன –அமெரிக்க நீதித் திணைக்களம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள்காணப்படுவதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதிக்கு எதிராக கொலம்பிய மாவட்ட நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாடு ஒன்றின் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டபோதிலும், அவருக்கு எதிராக தண்டனை வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழர் இன ஒடுக்குமுறைக்கு ஜனாதிபதி உடந்தையாக இருந்தார் என மனோகரன்என்பவரினால் அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
 
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, குற்றச்செயல்களிலிருந்து தண்டனை விதிக்க முடியாத ராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதாக அமெரிக்கநீதிமன்றத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now