ஈரான்
மீதுள்ள அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் எண்ணெய் ஏற்றுமதியில்
இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டால், இலங்கையின் எரிவாயு மற்றும் எண்ணெய்
தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஓமான் தயாராகவுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஓமான் பெட்ரோலிய அமைச்சர் டாக்டர்
முஹம்மட் பின் ஹமீட் அல்-ரம்ஹி, இலங்கை பெட்ரோலிய அமைச்சர் சுசில்
பிரேம்ஜயந்தவை கடந்த வியாழன்று சந்தித்து மேற்படி உறுதிமொழியை
வழங்கியுள்ளார்.
அமைச்சர் அல்-ரம்ஹி தலைமையிலான
ஓமானிய பிரதிநிதிகள் குழு இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கு
கடந்த வியாழக்கிழமை கொழும்பு வந்திருந்தனர்.