இந்த குழுவின் தலைவர் தாரா விஜயதிலக்க குழுவின் விசாரணை அறிக்கையை நேற்று அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் இந்த குழு நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐந்து பேர் கொண்ட இந்த குழு தமது விசாரணை அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
