இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 258 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
302 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20ஓவர்களில் 43 ஓட்டங்களுடன் சகல விகெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
1986 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற மேற்கிந்திய அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமையே இதுவரை அவ்வணியின் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக
ஸிம்பாப்வே அணி பெற்ற 35 ஓட்டங்களே ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் ஓர் அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் இருவரும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
தினேஷ் சந்திமால், குமார் சங்கக்கார இருவரும் தலா 4 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மத்திவ் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
மஹேல ஜயவர்தன 2 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 6 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 13 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இலங்கை அணியின் சார்பில் ஆகக்கூடுதலாக கோசல குலசேகர 19 ஓட்டங்களைப் பெற்றார்.
நுவன் குலசேகர 6 ஓட்டங்களையும் லஷித் மாலிங்க ஒரு ஓட்டத்தையும் அஜித் மெண்டிஸ் 3 ஓட்டங்களையும் பெற்றனர். தில்ஹார பெர்னாண்டோ ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் மோர்ன் மோர்கெல் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சோட்சோப் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரொபின் பீட்டர்சன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ரொபின் பீட்டர்சநன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெய்ன் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, தென்னாபிரிக்க அணியின் சார்பில் ஹஸிம் அம்லா 112 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜக் கலிஸ் 72 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக மோர்ன் மோர்கெல் தெரிவானார்.