சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் நான்காவது 20க்கு 20 உலக கிண்ண
கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்
இலங்கையில் நடைபெறவுள்ளன.
இலங்கையில்
நடைபெறவுள்ள இவ்வுலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குரிய சகல வசதிகளையும்
செய்து கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த
ஆலோசனைக்கமைய அமைச்சரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
மகளிருக்கும்
ஆண்களுக்குமான இக்கிரிக்கெட் போட்டிகளுக்கென 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
52 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 9.4
மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு
வழங்குகிறது.
மேலும்
இக்கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை செலவிட வேண்டிய தொகைக்காக மேலும் 30
மில்லியன் அமெரிக்க டொலர்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்க
முன்வரவுள்ளது.
பொருளாதார
அபிவிருத்தியுடன் இலங்கை தொடர்பான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும்
இச்சந்தர்ப்பமாக பயன்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே
அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார
அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா சபை, இலங்கை ஹோட்டல் நிறுவனம், முதலீட்டுச்
சபை, தேசிய மரபுரிமை அமைச்சு, கலாசார அமைச்சு, என்பன இணைந்து செப்டம்பர்,
அக்டோபர் மாதங்களில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்துள்ளன.