உண்மையைக்
கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா
என்பதில் சந்தேகம் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா
தெரிவித்துள்ளார்.
ஜே. ஸ்ரீரங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் உத்தேசம் அரசாங்கம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணை உள்ளிட்ட சகல பரிந்துரைகளையும் அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆணைணக்குழுவின் தலைவராக செயலாற்றிய சீ.ஆர். டி சில்வா சட்டத்துறையில் பழுத்த அனுபவம் மிக்கவர் என ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
எனவே, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உதாசீனம் செய்துவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய
இலங்கை ஒப்பந்தம், பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற கடந்த கால
ஒப்பந்தங்கள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில்
அமைச்சர்களின் நிலைப்பாடு போன்றவற்றை கருத்திற் கொள்ளும் போது
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம்
நிலவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று தகவல்
வெளியிட்டுள்ளது.
இந்த சர்வதேச ஊடகத்தின் தகவல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.