இணையத்தள
முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும். ஏன் ‘www’ என்று
மட்டும் சேர்க்கிறார்கள்? அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’ என்றோ இருந்
தால் என்ன என்று சிந்தித் திருக்கி றீர்களா? அப்படியானால் உங்களுக் கான
பதிவு தான் இது! இணையத் தள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன்
இரண்டு ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். அவை
1) உயர் நிலைத் திரளம்(‘Top Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’)
ஆகிய இரண்டும் ஆகும். இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய சிந்தனைக்கு விடை கிடைத்து விடும்.
உயர் நிலைத் திரளம் (‘Top Level Domain’)
இணையத்தளங்கள்
‘.com’, ‘.org’, ‘.co.in’, ‘.edu’ என்பன போன்ற பல பின்னொட்டுகளுடன்
இருப்பது உங்களுக்குத் தெரியும் அவற்றைத் தாம் உயர்நிலைத் திரளம் என்று
சொல்கிறோம். இவற்றுள் ஏதேனும் ஓர் உயர்நிலைத் திரளத் தைக் கொண்டு தான்
இணைய த்தளங்கள் எல்லாவற்றின் பெயரும் முடியும்.
இணையத்தளத்தின் பெயருக்கு முன்னால் ‘www’ என்று பார்க்கிறீர்
கள் அல்லவா? அது தான் துணைத் திரளம் ஆகும். இந்த ‘www’ என்பது போலப் பல
துணைத் திரளங்களை ‘1234’, ‘abc’, ‘xyz’, என நாம் வைத்துக் கொள்ளலாம். ‘www’
என்பதைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. அதே போல்
ஏதாவது ஒரு துணைத் திரளத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்னும்
கட்டாயமும் இல்லை. நீங்கள் தமிழ் என்று ஓர் இணையத்தளம் உருவாக்க விரும்
பினால் ‘www.thamizh.com’ என்று தான் அமைக்க வேண்டும் என்பதில்லை; வெறுமனே
‘thamizh.com’ என்றும் வைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கக்கூடிய இணையத் தளங்களாகிய
‘twitter’, ‘word press’ ஆகியன துணை த்திரளம் இன்றி தாம் இரு க்கின்றன.
(ஒரு முறை தான் உலவி யில் தட்டச்சிட்டுப் பாருங் களேன்!)
LankaNow தளத்தையே
‘www’ இன்றி ஒருமுறை உலவி யில் திறக்க முயலுங்கள்! பிறகு ஏன் ‘www’
என்னும் துணைத் திரளத்தைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள் என்கிறீர்
களா? வைய விரி வலை (‘World wide web’) என்பதன் சுருக்கமாகிய ‘www’ என் பது
உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று! அவ்வளவு தான்! அதனால் வேறு பயன்
எதுவுமில்லை.