தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க
தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த
உண்மை தன்மையை அறிய ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.அதற்கு
பதிலளித்த அவர், “இராஜினாமா செய்யும் நோக்கம் இல்லை. ஆனால் தபால்
திணைக்களத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் வழக்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளேன்.” என்றார்.