கொழும்பில் இருந்து ஆறு பிரதான
நகரங்களுக்கு சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை
எடுத்துள்ளது. மைக்ரோ கார் நிறுவனத்தினூடாக தயாரிக் கப்பட்டுள்ள 8 மைக்ரோ
பஸ்கள் கொழும்பில் இருந்து மொரட்டுவ, கெஸ்பேவ, நீர்கொழும்பு, கம்பஹா,
கடுவெல மற்றும் ஹோமாகம ஆகிய நகரங்களுக் கிடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட
வுள்ளன.
கொழும்பு நகருக்கு நுழையும் பிரதான
வீதிகளில் புதிய சொகுசு பஸ் சேவை இடம்பெற உள்ளதோடு ஏற்கெனவே கொழும்பில்
இருந்து மொரட்டுவை மற்றும் நீர்கொழும்புக் கிடையில் ஆரம்பிக்கப்பட்ட சொகுசு
பஸ் சேவைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகரில் காணப்படும் வாகன
நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மொரட்டுவையில் இருந்து புறக்கோட்டை
வரையான பஸ் சேவையை நீர்கொழும்பு வரை நீடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.