டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிதாழ்மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டு 123.20 ரூபா ஆகியது.
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவதை தடுக்கும் நோக்கில் ஓர் அரசாங்க வங்கி டொலர்களை விற்பனை செய்தது. இந்த நடவடிக்கை இலங்கை நாணயத்தின் பெறுமதியை பேணுவதற்காக இனிமேல் தலையிடுவதில்லை என்ற மத்திய வங்கியின் தீர்மானத்தை மீறுவதாகவுள்ளது.
ஓர் அரசாங்க வங்கி டொலரை 123 ரூபாவுக்கு விற்ற பின்னர் படிப்படியான 121 ரூபா என்ற மட்டத்துக்கு கொண்டுவந்தது என பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அந்நிய செலாவாணி வர்த்தகர் கூறினார்.
ஒரு டொலரின் விலையை 121 ரூபாவில் பேணுவதற்கு தார்மிக ரீதியான தூண்டுதலை நாணய மாற்றுநர்கள் அளிக்க வேண்டும் என மத்திய வங்கி கூறியுள்ளதாக சில நாணய மாற்றுநர்கள் தெரிவித்தனர்.
சொற்ப அளவான டொலர்களே இவ்வளவு குறைந்த ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் கூறினார். இலங்கை நாணயத்தின் பெறுமதியை பாதுகாக்க தார்மிக ஊக்குதலை மத்திய வங்கி பயன்படுத்துமா எனக் கேட்டபோது ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 'அதையும் நாம் பயன்படுத்தக்கூடும்' எனக் கூறினார்.