முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம்
தொடர்பில் துமிந்த சில்வாவை கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்து இரண்டு
மாதங்களானபோதிலும் அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்
சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அஜித் பத்திரன தெரிவித்தார்.
இதற்கான தாமதம் குறித்து கேட்டபோது 1,900 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சட்ட மா அதிபரின் ஆலோசனை தமக்குத் தேவையெனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறினர்.
நீதிமன்றத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறத் தேவையில்லையென மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்